Breaking News

காவல் மரணங்களை விசாரிக்க Coroner-க்கு தனிப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் !

Torres Strait Islander பழங்குடியினர் custody-ல் மரணம் அடைந்த வழக்கை விசாரிக்கும் NSW Coroner அவர்களுக்கு போதுமான உதவிகள் வழங்கி அவர் தனிப்பட்ட முறையில் விசாரிக்கவும், ஆதாரங்களை கண்டடையவும் உதவ வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி இன மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார்.

இது தொடர்பான NSW மேலவை விசாரணை திங்களன்று தொடங்கியது.பழங்குடியினரின் காவல் இறப்பு குறித்து விசாரிக்க coroner நீதிமனறத்திற்கு மேலும் பொருளுதவி தேவை என்று NSW Bar Associations முதல் நாடுகளின் குழுத்தலைவரும் ஆஸ்திரேலியாவின் முதல் மூத்த வழக்கறிஞருமான Tony McAvoy திங்களன்று விசாரணையில் தெரிவித்தார்.

அதிகாரத்தில் இருப்பவர்களால் custody-ல் நிகழ்த்தப்பட்ட ஒரு பழங்குடியின் மரணத்திற்கு செய்யப்படும் விசாரணையில் மற்ற பழங்குடியின மக்களுக்கு இதில் நம்பிக்கை இல்லை என திரு McAvoy தெரிவித்தார்.

Coroner தனது வேலையை செய்ய அனுமதிக்க வேண்டும். சுயமாக விசாரணை செய்ய அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.2008 டிசம்பர் மாதம் சிட்னியின் Long Bay சிறையில் இறந்த David Dungay உட்பட குறைந்தது 21 பழங்குடியினர் NSW காவலில் இறந்துள்ளனர்.

தேசம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மற்றும் Torres Strait Islander மக்கள் custody-ல் இறந்துள்ளனர்.
ஜூன் 2020 முதல் காவல்துறை புள்ளிவிவரங்கள் NSW சிறைவாசிகளில் கால் பங்கிற்கும் அதிகமானோர் பழங்குடியினர் என்பதை காட்டுகின்றன.

கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் மற்றவர்களை விட பழங்குடியினர் ஒன்பது மடங்கு அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
திரு Dungbay-யின் குடும்ப உறுப்பினர்கள் “The Domain”-ல் நடந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

Coronial செயல்முறை சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு மிகவும் கடினமான ஒன்றாகும். குறிப்பாக பழங்குடியினருக்கும் Torres Strait தீவில் குடியிருப்பவர்களுக்கும் இது மிகவும் மோசமான நிலமையாகும்.

மேலும் ,குற்றத்திற்கான தண்டனை சாத்தியம் என நம்பாவிட்டாலும் NSW coroner இந்த வழக்கை Director of Public Prosecutions-க்கு பரிந்துரை செய்ய வழிவகுக்க வேண்டும் என திரு Mc Avoy தெரிவித்தார்.