Breaking News

காட்டுத்தீயை அணைக்க தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் போராட்டம் !

காட்டுத்தீயானது Perth-இன் வடக்கு பகுதியில் கடுமையாக தாக்க உள்ளதால் ,அங்கு வசிக்கும் மக்களுக்கு அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .The Ocean Farms Estate மற்றும் Seaview Park அருகிலும் தீ விபத்து அபாயத்தில் உள்ளது .மேலும் சனிக்கிழமை முதல் 9,000 hectare-களுக்கு மேல் தீக்கு இறையாகியுள்ளது .

சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தொடர்ந்து போராடினர் .பெர்த்தின் வடக்கே Geraldton பகுதியில் தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளன .தீயின் தாக்கம் சற்று குறைந்து உள்ளதாகவும் கூறுகின்றனர் .

செவ்வாய்க்கிழமை அன்று incident controller Andy Duckworth இது குறித்து கூறுகையில் ,Ocean Farms எஸ்டேட்டில் 3.5 கிமீ / மணி வேகத்தில் காட்டுத்தீ பரவியதாகவும் தெரிவித்தார் .அதனை கட்டுப்படுத்த பெரும் சவாலாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார் .

50 கிலோ மீட்டர்கள் வரை தீ மளமளவென படர்ந்ததாகவும் ,200 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடியதாகவும் ,13 விமானங்கள் air tanker பயன்படுத்தி இந்த மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

திங்களன்று சற்று அபாயம் குறைந்த பிறகு பெர்த்தின் வடக்கு மற்றும் தெற்கில், மாநிலத்தின் தென்மேற்கு கடற்கரையிலும், Goldfields-களிலும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது .இது குறித்து தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை துணை ஆணையர் Craig Waters கூறுகையில் , தீ விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் .