Breaking News

கருக்கலைப்புச் சட்டத்தை சீர்திருத்தும் மசோதா தாக்கல் !

கருக்கலைப்புச் சட்டத்தை சீர்திருத்தும் மசோதா தாக்கல் !

தெற்கு ஆஸ்திரேலியாவின் கருக்கலைப்புச் சட்டத்தை சீர்திருத்துவதற்கான மசோதா பாராளுமன்றத்தின் பார்வைக்குச் சென்றது.இதை criminal குற்றமாக கருதாமல் சுகாதாரப் பிரச்சனையாக கருத வேண்டும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் திட்டம் கருக்கலைப்பை முற்றிலும் குற்றவியல் சட்டத்தில் இருந்து நீக்குகிறது. இது மற்ற ஆஸ்திரேலிய மாநிலங்களுக்கு நிகராக எங்களை கொண்டு வரும் என Ms Chapman நம்பிக்கை தெரிவித்தார்.

மருத்துவ சட்டத்தின் படி,இது ஒரு சாதாரண மருத்துவ நடைமுறை என்ற புரிதலின் அடிப்படையில் மற்ற சுகாதாரப் பிரச்சினை போலவே சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஒரு மருத்துவர் ,22 வாரங்கள் 6 நாட்கள் ஆன கர்ப்பத்தை கூட கருக்கலைப்பு செய்ய முடியும்.அதற்கு பிறகான கருத்தரிப்புகளை கலைக்க ஒரு மருத்துவர் மற்றொரு மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். இருவரும் சரியான முறையில் கருக்கலைப்பு சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்த கருக்கலைப்பு பிரச்சினையை நவீன சமகால முறையில் கையாள்வதற்கான நேரம் இது என Ms Chapman தெரிவித்தார்.

இது சீர்திருத்தத்திற்கான நேரம் என்று தெரிவித்த மனித சேவைகள் அமைச்சர் Michelle Lensink இந்த மசோதாவை மாநில மேலவையில் தாக்கல் செய்தார்.

இது பெண்களை நீண்டகாலமாக பாதித்த பிரச்சனை என்று AMA மாநிலத தலைவர் Chris Moy தெரிவித்துள்ளார்.இந்த மசோதா மேலவையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படும்.இறுதி முடிவை எடுப்பதற்கு முன் மசோதாவின் வடிவத்தை காணக் காத்திருப்பதாக premier கூறினார்.