Breaking News

கடும் எதிர்ப்பை தொடர்ந்து cox plate குதிரை பந்தயத்தில் 1,250 பேர் அனுமதிக்கப்படலாம் என்ற முடிவில் இருந்து பின் வாங்கியது அரசு!

இந்த வார இறுதியில் மெல்பர்னின் Cox Plate குதிரை பந்தயத்தின் 100ஆவது ஓட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை அனுமதிக்க வேண்டும் என்ற முடிவிற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் விக்டோரிய அரசு அம்முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது.

Moonee Valley-யில் வெள்ளி இரவு நடைபெறவுள்ள Manikato Stakes மற்றும் சனிக்கிழமை cox plate-ல் 500 உரிமையாளர்கள்,ஜாக்கிகள், செயல்பாட்டு ஊழியர்கள்,ஊடகங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொள்ளலாம் என மாநில அரசு செவ்வாய் அனறு அறிவித்தது.
அதிகப்பட்சமாக 1250 பேர் course-ல் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்தது.

இந்த சந்திப்பில் கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சோதனை செய்யப்படும் என்று Racing minister Martin Pakula தெரிவித்திருந்தார்.

முக்கிய விஷயங்களான இறுதி சடங்கிற்கும் ,குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் இருக்கும் சூழ்நிலையில், குதிரை பந்தைய அறிவிப்பு சமூக ஊடகங்களில் கடும் சர்ச்சையை கிளப்பியது.பலரும் இதற்கு எதிர்ப்புகள் தெரிவித்தும் இருந்தனர்.

ஆனால் செவ்வாய் இரவு அன்று Mr Pakula, Moone Valley Racing club உடன் பேசியதாகவும் அதன் பின் முடிவு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அடுத்த கட்டத்தை நாங்கள் அடையும் வரை உரிமையாளர்கள் பந்தைய பாதையில் திரும்ப மாட்டார்கள். இதனால் அடைந்த மனவருத்தங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த state greens-ன் தலைவர் Ellen Sandell, race course உரிமையாளர்களுக்கு ஒரு விதி மற்றவர்களுக்கு ஒரு விதியா என்று தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

உரிமையாளர்கள் course-ல் இருப்பதற்கான நேரக் கட்டுபாடு விதிக்கப்பட உள்ளது. உணவுகள் பார்சல் முறையில் மட்டுமே கிடைக்கும், உரிமையாளர்களும் connections-ம் mounting yard மற்றும் குதிரை ஸ்டால்களில் இருந்து சமூக இடைவேளியோடு இருக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முன் வழங்கப்பட்டது.

அரசின் முடிவில் மாற்றம் ஏற்படுவதற்கு முன்னதாக, milestone பந்தயத்திற்கு வந்த பார்வையாளர்களை கண்டு மகிழ்ச்சியடைவதாக Moone Valley Club-ன் தலைமை நிர்வாகி Michael Browell தெரிவித்தார்.

இந்த ஆண்டு உறுப்பினர்களையும் பந்தயத்தை விரும்பும் பொதுமக்களையும் நாங்கள் வரவேற்க முடியாது என்பது ஏமாற்றமளித்தாலும் அவர்கள் வீட்டிலிருந்தே இந்த திருவிழாவை பார்த்து ரசிப்பதற்காக ஆவலாக காத்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.

Daniel Andrews நவம்பர் 2 ஆம் தேதிக்கு மேல் விதிமுறைகளை தளர்த்துவதற்கு முடிவு எடுத்துள்ள நிலையில் ஞாயிறு அன்று வரும் அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என அனைவரும் கருதுகின்றனர்.