Breaking News

கடந்த 10 ஆண்டுகளை விட இப்பொழுது ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடிபெயர்ந்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளது !

ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளது ! புள்ளி விவரத்தில் மாபெரும் வித்தியாசம் !

உலகில் உள்ள அழகிய நாடுகளில் பலரும் விரும்பும் நாடாக கருதப்படும் ஆஸ்திரேலியாவில் பல்வேறு வகையான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் குறிப்பாக தமிழர்கள் அங்கு பல ஆண்டுகளாக குடிபெயர்ந்து நிரந்தர குடியுரிமையையும் பலர் பெற்றுள்ளனர்.இவ்வாறு தமிழர்கள் உட்பட பலரும் ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற நிலையில் கடந்த 10 ஆண்டுகள் இல்லாமல் இப்பொழுது நிரந்தர குடியுரிமை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கொரானா தாக்கத்தின் காரணமாக அனைத்து வாகனப் போக்குவரத்துகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு வர பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விசாக்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. அவ்வாறு விசா கிடைப்பதில் பல்வேறு சிக்கல்களும் தாமதங்களும் ஏற்பட்டு வருவதால் இதுவரை காணாத அளவிற்கு நிரந்தர குடிபெயர்ந்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் 2019 முதல் 2020 வரை உள்ள நிதிநிலை அறிக்கையின் படி 1,40, 366 நிரந்தர விசாக்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரானா தொற்று ஏற்படுவதற்கு முன்பு 160, 000 நிரந்தர விசாக்கள் சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையின் ஒப்புதல் வழங்கப்பட்டு இருந்தது. இதைப்பற்றிய ஆஸ்திரேலியன் நேஷனல் யுனிவர்சிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கொரானா தொற்று உலகளாவிய போக்குவரத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் தடையாகவும் இருந்து வருவதால் அதில் பல்வேறு தாமதங்கள் ஏற்பட்டு பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது.

முன்னாள் டெபுடி செக்ரெட்ரி அப்துல் ரிஸ்வி கூறியிருப்பதாவது, “மிகப்பெரும் அளவிலான ஆஸ்திரேலியாவில் வாழும் மக்களுக்கு போதுமான அளவு விசாக்கள் அளிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.இந்நிலையில் இந்த ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 90,499 பேருக்கு விசா உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு எண்ணிக்கை 84,260 என்பது குறிப்பிடத்தக்கது .

கடந்த வாரம் அரசு அறிவித்ததன் படி ஆஸ்திரேலியாவில் தற்காலிக குடியுரிமை பெற்றுள்ள நர்சுகள், டாக்டர்கள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் மற்றும் கன்ஸ்டிரக்ஷன்ஸ் மேனேஜர்ஸ் போன்றவர்களின் பொது லிஸ்டை வெளியிட்டிருந்தது.அவ்வாறு ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள 17 வகையான தொழில் செய்பவர்கள் ஆஸ்திரேலியாவில் நுழைந்தால் கட்டாயமாக 14 நாட்கள் தனிமையில் அவர்களது சொந்த செலவில் இருக்க வேண்டும்.கொரானா வைரஸ் தாக்கம் ஆஸ்திரேலியாவிலுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மிகப்பெரிய அளவிலான வேலையின்மை உள்ளிட்டவைகளுக்கு வழிவகுத்துள்ளது.

இதனால் அரசு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் நிலையிலும் அதை சரிசமமாக பேலன்ஸ் செய்யவும் முயற்சி செய்து வருகிறது. குடிபெயர்ந்தோர் மற்றும் அகதிகள் செட்டில்மெண்ட் ஏஜென்சி AMES ஆஸ்திரேலியா அமைப்பு கூறியதாவது, கொரானா நோய்த் தொற்றினால் வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் பணியில் அமர்த்தினால் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வரலாம் என கூறியுள்ளது.