Breaking News

கடந்த நூறு நாட்களில் கேன்பெராவில் முதல் தொற்று ஏற்பட்டு உள்ளது

கேன்பெராவில் கடந்த நூறு நாட்களில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. இந்த தொற்று வெளிநாட்டிலிருந்து திரும்பிய 70 வயது ஆணுக்கு கண்டறியப்பட்டதாக ACT தலைமை சுகாதார அதிகாரி Dr Kerryn Coleman செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அந்த நபர் ஒரு diplomat என்றும் அக்டோபர் 9 ஆம் தேதி வெளி நாட்டிலிருந்து திரும்பினார். அவர் சிட்னி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து கேன்பெராவிற்கு தனியார் வாகனத்தில் பயணம் செய்தார்.கேன்பெரா செல்லும் வழியில் எங்கும் நிற்கவில்லை. கடந்த 104 நாட்களில் இந்த நிலப்பகுதியில் ஏற்பட்ட முதல் தொற்று இதுவாகும்.

200 பேர் கலந்து கொள்ளக்கூடிய கூட்டங்களுக்கு கேன்பராவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பல பணியிடங்கள் வேலைத் திட்டத்திற்கு திரும்பத் தொடங்குகின்றன.

உள்ளூர் கழிவு நீரில் கோவிட் 19 வைரஸ் கண்டறியப்பட்ட பின், Bathrust 1000 மோட்டார் பந்தயத்திற்கு வந்திருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என NSW Premier Gladys Berjiklian வலியுறுத்திய பின்னர் இந்த புதிய தொற்று அறிவிப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவரையும் தொற்று அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று வியாழன் அன்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கழிவு நீர் sample-ஐ ஆராய்ந்ததில், பந்தயத்தில் கலந்து கொண்ட அல்லது பணிபுரிந்த ஒருவரோ, bathrust-க்கு வருபவர் அல்லது உள்ளூர்வாசி ஒருவருக்கோ தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதுவதாக NSW Health தெரிவித்தது.

மிதமான அறிகுறிகள் இருந்தாலும் உள்ளூர்வாசிகளும் வார இறுதி பார்வையாளர்களும் உடனடி பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்பது உறுதி செய்யும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பந்தயத்தில் கலந்து கொண்டவர்கள், பணியாளர்கள் என்று அனைவரது பெயர் பட்டியலை தயார் செய்து NSW விசாரித்து வருகிறது.ஒரு புதிய வைரஸ் தொற்று இரவில் NSW பதிவு செய்தது.இதனை தொடர்ந்து சமூகப் பரவலை குறைப்பதற்கு பணிசெய்வதாக Ms Berjiklain தெரிவித்தார்.

இந்த தொற்று Lakemba தனியார் clinic cluster உடன் தொடர்புள்ளது.கூடுதலாக ஆறு புதிய தொற்றுகள் ஹோட்டல் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று Premier கூறினார்.

கட்டுப்பாடுகளில் ஒழுங்கு இல்லை என்று மதத்தலைவர்கள் புகார் தெரிவித்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் வழிபாட்டுத் தளங்களில் 300 பேர் வரை கலந்துகொள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

ஜிம்களிலும் தளர்வுகள் கொடுக்கப்படும்.20 நபர்க்கு மேல் உடற்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது மட்டும் COVID பாதுகாப்பு marshal தேவைப்படும்.கடந்த 24 மணி நேரத்தில் 7401 பேர் மட்டும் சோதிக்கப்பட்ட நிலையில் NSW Health இந்த பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பதை 15,000 மக்கள் கவனித்துள்ளனர்.

மேலும்,ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் இருந்த return travellers எட்டு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.