Breaking News

ஏன் இந்த ACT தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது?

இந்த தேர்தல் canberrans இதுவரை சந்தித்த தேர்தலில் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. அடுத்த நான்கு ஆண்டு ஆஸ்திரேலிய தலைநகர் மண்டலத்தை ஆள்வது யார் என்று தீர்மானிக்கும் தேர்தலாகும்.

இந்த கொரோனா பேரிடர் காலத்திலும் 60 சதவீத canberran மக்கள் கடந்த சனிக்கிழமை அன்று வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளனர்.முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவும் நடைபெற்றது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு 12 மொழிகளில் வாக்குபதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Labor முதல்வர் Andrew Barr தனது தலைமையை மீண்டும் தொடர்வதற்கான பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.

கொரோனா பேரிடர் மற்றும் காட்டுதீயை தான் கையாண்ட விதத்தை பிராசாரம் செய்துள்ளார்.இந்த தலைமை தொடர வேண்டும் என canberrans-ஐ கேட்டுக்கொண்டுள்ளார்.முதன் முதலில் கோவிட் தொற்று முழுவதுமாக நீக்கப்பட்ட மாநிலங்களில் ACT-உம் ஒன்று.

Liberal தலைவர் Alistair Coe அரசியல் மாற்றம் அவசியம் என்று வலியுறுத்தி உள்ளார். Cost of Living-ஐ குறைக்க வேண்டும். நகரத்தில் உள்ள அனைவரும் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்.மேலும் வரியை குறைத்து சேவைகளை அதிகரிப்பதே அவரது நோக்கம் என திரு Coe தெரிவித்தார்.

ACT சட்டமன்றம் 12 Labor, 11 Liberal, 2 Greens உறுப்பினர்கள் இந்த சிறுபான்மை அரசின் சார்பாக உள்ளனர். இந்த தொகுதியில் மொத்தம் 429,800 மக்கள் உள்ளனர். அதில் 300,000 பேர் வாக்கு உரிமை பெற்றவர்கள்.

Labor கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டால் south Australian Tesla Battery Project-ஐ விட பெரிதான renewable energy Battery திட்டம் 100 மில்லியன் டாலர்கள் மதிப்பில் Canberra-வில் தொடங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.

Shane Rattenbury தலைமையிலான Greens கட்சி எரிவாயு பயன்பாட்டை அகற்றிவிட்டு 20 மில்லியன் டாலர் மதிப்பில் மின்சக்தி பயன்பாட்டை வீடுகளும் வணிகங்களும் பயன்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க ஆதரவு தெரிவிக்கும்.

காலநிலை மாற்றம், வீடு வசதி அமைப்பு போன்ற அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.
இந்த கோவிட் தொற்றின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் liberal வீடு மற்றும் வணிக வாடகை விகிதங்களையும், கார் பதிவு கட்டணத்தையும் குறைப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளது.

மக்களின் வேலை வாய்ப்பின் மேல் அதிக கவணம் செலுத்தப்பட வேண்டும் என Mr Barr வலியுறுத்தி உள்ளார்.மக்கள் உடல் நலம், கல்வி மற்றும் போக்குவரத்து வசதிகளும் இந்த தேர்தலில் முக்கிய பிரச்சாரமாக அனைத்து கட்சியினராலும் கருதப்படுகிறது.

மன நலத்தை பேணுவதும் நமது கடமையாக இருக்க வேண்டும் என Rattenbury தெரிவித்தார்.பழங்குடி மக்களுக்கும், நமக்கும் இருக்கும் இடைவெளியை குறைப்பதற்கு நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகமாக இருக்கின்றது என்று அவர் தெரிவித்து உள்ளார்.