Breaking News

எமிரேட்ஸ் சர்வதேச விமானங்களை நிறுத்தி வைக்கப்பட்டதால் , தனிமைப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியர்கள் விரக்தியடைந்துள்ளனர்.

சர்வதேச விமானங்களை நிறுத்தி வைக்கப்பட்டதால் , ஏறக்குறைய 37,000 ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். இதனால் நாட்டின் சர்வதேச வருகை கிட்டத்தட்ட பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் தனது சர்வதேச விமானங்கள் பல ஆஸ்திரேலியாவிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியர்கள் ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் தங்கள் விரக்தியை வருத்தத்துடன் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே துபாயை தலைமை தளமாகக் கொண்ட சிட்னி, பிரிஸ்பேன் மற்றும் மெல்போர்ன் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் “செயல்பாட்டு காரணங்களால் மேலும் தகவல்கள் அறிவிக்கப்படும் வரை” நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது.

பிரிஸ்பேனைச் சேர்ந்த 26 வயதான ரியான் சிம்ஸ் தற்போது போலந்தில் இருக்கிறார், ஆனால் கடந்த ஆண்டின் பெரும்பகுதியை ஐக்கிய இராச்சியத்தில் தான் இருந்துள்ளார். மேலும் அவர் கூறும் போது, தான் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தை குறை கூறவில்லை, ஆனால் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் தான் சரியில்லை என அவர் சர்வதேச திறனைக் குறையாக கூறியுள்ளார்.

ஒவ்வொரு நகரத்திலும் உள்ளேயும் வெளியேயும் தங்களது கடைசி விமானங்கள் பின்வருமாறு விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது:

  • Dubai-Brisbane (EK430), 16 ஜனவரி
  • Brisbane-Dubai (EK431), 17 ஜனவரி
  • Dubai-Sydney (EK414), 18 ஜனவரி
  • Sydney-Dubai (EK415), 19ஜனவரி
  • Dubai-Melbourne (EK408), 19 ஜனவரி
  • Melbourne-Dubai (EK409), 20 ஜனவரி

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு டிக்கெட் உள்ளவர்கள் விமானம் அல்லது அவர்களின் பயண முகவரை தொடர்பு கொள்ளுமாறு எமிரேட்ஸ் அறிவுறுத்தியுள்ளது.

“சிட்னி, மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் ஆகிய இறுதி இடங்களுடன் டிக்கெட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மேற்கண்ட விமானங்கள் முடிந்த பின்னர் அவர்கள் பயணத்தின் போது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை” என விமான நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் பயண முகவர் அல்லது எமிரேட்ஸ் தொடர்பு மையத்தை மறு முன்பதிவு விருப்பங்களுக்காக தொடர்பு கொள்ள வேண்டும்.” எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையில் தற்போது சுமார் 38,000 பேர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர்கள் திரும்பி வர விரும்புவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் 5,000 பேர் வரமுடியாமல் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

“வெளிநாடுகளில் பாதிக்கப்படக்கூடிய ஆஸ்திரேலியர்கள் திரும்பி வருவதற்கு ஆதரவாக மேலும் வசதியான விமானங்கள் ஐக்கிய இராச்சியம், இந்தியா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் வாரங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட் மோரிசன் இப்போது NSWக்கு வாரத்திற்கு 1505 பயணிகளையும், மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு 512 பேரையும், குயின்ஸ்லாந்திற்கு 500 பயணிகளையும் குறைப்பதாக அறிவித்தார். மேலும், “இது முன்பு வைத்திருந்த ஏற்பாட்டின் கீழ் அல்லாமல், பிப்ரவரி 15 ம் தேதிக்குள் மதிப்பாய்வு செய்யப்படும்,என்று அவர் கூறினார்.