Breaking News

எந்த வருடத்திலும் இல்லாத அளவிற்கு கூட்டாட்சி பட்ஜெட் !

கூட்டாட்சி பட்ஜெட் கூட்டத்தொடர் திட்டங்கள்:

கோவிட் 19 ஏற்படுத்திய பொருளாதார பின்னடைவின் தாக்கம் இன்னும் குறையாமல் ஆஸ்திரேலியா மக்கள் தவித்துக்கொண்டிருந்த சூழ் நிலையில்,அதை மீட்டெடுக்கும் திட்டங்கள் கூட்டாட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும்.

இந்த அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த்து என்று Prime Minister Scot Morrisonனும் , Treasurer Josh Frydenberg தெரிவித்துள்ளனர்.
பொருளாதார மீட்பு திட்டத்தால் நாட்டின் பணப் பற்றாக்குறை 210 பில்லியன் டாலர்கள் சென்றடையும் என்று கணிக்கப்படுகிறது. நாட்டின் தேசிய கடன் 1.1 ட்ரில்லியன் டாலர்களுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தகொரோனா ஏற்படுத்திய பொருளாதாரப் பின்னடைவை மீட்டெடுக்கும் திடமானத் திட்டம் பட்ஜெட் கூட்டத்தொடரில் வரையருக்கப்படும் என Mr Morrison தெரிவித்தார்.பல கோடி மதிப்பிலான முதலீடுகள் உள்கட்டமைப்பை பெருக்குவதற்கும், பயிற்சி மற்றும் திறன் வளர்ச்சிக்கும் உற்பத்தித் துறையை ஊக்கவிப்பதற்கும் செய்யப்பட்டும் என்றும் கூறுகின்றனர்.

மேலும் பொருளாதார பின்னடைவுகள் பெரும் பொருட்செலவுடையது.தாமதித்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.அதை மீட்டெடுப்பதே நமது முதல் குறிக்கோள் என Mr Morrison தெரிவித்தார்.நாட்டில் வேலையின்மையை 6 சதவீதத்திற்கு கீழே கொண்டு வருவதற்காக வேலை வாய்புகளை அதிகரித்து ஆஸ்திரேலியர்களை மீண்டும் பணிக்கு வரச் செய்வதே அரசின் முதல் குறிக்கோள் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

தற்போது வேலையின்மையின் சதவீதம் ஜூலை மாதத்தில் 7.5 சதவீதததிலிருந்து 6.8 சதவீதமாக ஆகஸ்ட்டில் குறைந்து பொருளாதாரம் மெதுவாக வளரத்தொடங்கியது,இருந்தபோதும் பல கோடி ஆஸ்திரேலியர்கள் வேலையில்லாமல் இருப்பதாக Mr Coates தெரிவித்தார்.
நமது முதல் மற்றும் இறுதிக்குறிக்கோள் வேலை வேலை வேலை மட்டுமே என்று கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பை அதிகரிக்க job keeper திட்டத்தில் 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து உற்பத்தி துறையை ஊக்கவிக்க அரசு முனைந்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியர்களின் வணிகத்துறைக்கு கூடுதலாக 1.2 பில்லியன் டாலர்கள் வழங்கி 100,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதனுடன் job Trainer திட்டத்தில் ஒரு பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து பட்டதாரி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டமும் இதில் அடங்கும்.உற்பத்தி துறையில் தொழில் நுட்ப வளங்கள், உணவு மற்றும் குளிர்பான உற்பத்தி, மருத்துவ சாதனங்கள், பாதுகாப்பு துறை, விண்வெளித்துறை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்த பட்ஜெட் திட்டம் ஆண் பெண் வேறு பாடின்றி வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என Professor Elizabeth Hill தெரிவித்துள்ளார்.
மேலும் இத்திட்டத்தில் வருமான வரி கட்டணம் நீக்கப்படுகிறது.Job keeper program தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.ஆஸ்திரேலியாவின் 2020-21 ஆண்டிற்கான migration மற்றும் Humanitarian Programs திட்டத்தை விரிவுபடுத்துவது பற்றியும் இந்த பட்ஜெட்டில் விவாதிக்கப்படுகிறது.

எரிவாயு துறையின் கட்டமைப்பை விரிவுபடுத்த 53 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.60 மில்லியன் டாலர்கள் பெண்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.10 மில்லியன் டாலர்கள் முதியோர் பராபரிப்பு, 61.7 மில்லியன் டாலர்கள் கலாச்சார இடங்களைப் பாதுகாக்க, 50 மில்லியன் டாலர்கள் சுற்றுலா துறைக்கு என்று பல திட்டங்கள் இந்த பட்ஜெட் தொடரில் தொடங்கப்படுகிறது.