Breaking News

ஊரடங்கிற்கு எதிராக நடந்த பேரணியில் 400க்கும் மேற்பட்டவர்கள் கைது !

மத்திய Melbourne-னில் செவ்வாய் அன்று நடந்த Anti-Lockdown பேரணியில் 400-க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

சமூகத்தின் பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள் ஆகியவற்றை புறக்கணித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராடியது காவல் துறைக்கு ஏமாற்றம் அளித்தது.

முகக்கவசம் அணியாதது, பொதுக் கூட்ட விதிகளை மீறியது, 25KM-க்கு மேல் பயணம் செய்தது, காவல் துறையினரை தாக்கியது ஆகிய குற்றங்களுக்காக 395 பிரிவின்படி அபராதம் வழங்கப்பட்டது.

ஒரு பெண் senior sergeant-ன் கைகள் உடைந்ததாக சந்தேகப்பட்டு அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

Melbourne-னில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், ஏறக்குறைய நான்கு மாதமாக ஊரடங்கு இருந்ததால் கோபமடைந்த எதிர்ப்பாளர்கள் விக்டோரிய பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.

“Free Victoria”, “Not Happy Dan” மற்றும் “Freedom” என்று எழுதப்பட்ட பலகைகளை வைத்து இருந்தனர்.கூட்டத்தின் மேல் Capsicum Spray அடிக்கப்பட்டது. கூட்டத்தில் பலர் கோவிட்-19 விதிகளின் படி முகக்கவசம் அணியாமல் இருந்தனர்.

மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காமல், பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து போராட அனைவருக்கும் உரிமை உண்டு என்று காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதை மீறுபவர்கள் காவல் துறையிடம் இருந்து கடுமையான நடவடிக்கையை எதிர்பார்க்கலாம். எதிர்ப்பு தெரிவிக்கும் ஜனநாயக உரிமையை விட மக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்று சுகாதார அமைச்சர் Martin Foley தெரிவித்துள்ளார்.இது எதிர்ப்பு தெரிவிக்கும் நேரம் இல்லை. பாதுகாப்பாக இருங்கள் விதிகளை பின்பற்றி இருங்கள் என்றும் வற்புறுத்தினர்.

இந்த போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் குழு , இதுபோல் மேலும் பல பேரணிகள் தொடரும் என தெரிவித்தது. Daniel Andrews-ஐ விரட்டும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.