Breaking News

உள்ளூரில் புதிய தொற்று இல்லாததால் கட்டுப்பாடுகள் தளர்க்கப்படுகிறது !

வழிபாட்டுத் தலங்களிலும், விருந்தோம்பல் இடங்களிலும் மக்கள் அதிகமாக கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட சூழ்நிலையில் உள்நாட்டில் எந்த ஒரு புதிய கோவிட் தொற்றும் NSW-வில் கண்டறியப்படவில்லை.

கடந்த 24 மணி முதல் இரவு 8 மணி வரை மாநிலத்தின் புதிய உள்ளூர் தொற்றுகள் எதுவும் கண்டறியப்படவில்லை .ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகளில் 5 புதிய தொற்றுகள் காண்டறியப்பட்டது என NSW Health தெரிவித்தது.

இந்த ஐந்து தொற்றும் முன்பு எடுத்த 13,000 சோதனைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மாநிலத்தில் குடியிருப்போர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும் என NSW Health வலியுறுத்தி வருகிறது.

மூச்சு திணறல், தொண்டை வலி, இருமல், காய்ச்சல் போன்ற எந்த அறிகுறி தென்பட்டாலும் உடனடி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிய வேண்டும் என Premier Gladys Berjiklian கேட்டுக்கொண்டார்.

மாநில அரசு இந்த வார இறுதியில் தளர்வுகளை அறிவிக்கும் சூழ்நிலையில் இரண்டாவது முறையாக 24 மணி நேர கால அளவில் எந்த புதிய தொற்றும் NSW-வில் பதிவாகவில்லை.வெளிக்கூட்டங்களில் 30 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

Group booking மற்றும் hospitality இடங்களில் 10ல் இருந்து 30க்கு உயர்த்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் 300 பேர் கூட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டம் செய்பவர்களும் 500 பேர் வரை கூட அனுமதி உள்ளது.