Breaking News

உலகின் உயிரினங்களைப் பாதுகாக்கும் சர்வதேச உறுதிமொழியில் கையெழுத்திட ஆஸ்திரேலிய அரசு மறுப்பு !

இயற்கை அழிவினைத் தடுக்க உலக நாடுகளில் இருந்து 64 தலைவர்கள் உறுதிமொழியில் ஒப்பந்தமிட்டுள்ள நிலையில்,ஆஸ்திரேலியா, சீனா மற்றும் அமேரிக்கா அரசு இதை நிராகரித்துள்ளது.

UN Biodiversity மாநாட்டிற்கு முன்னதாக 64 உலகத் தலைவர்கள் கொடுத்த உறுதிமொழியில் காற்று மாசை ஒழிப்பதும், கடலில் உள்ள plastic பொருட்களை நீக்குவதும்,2030 க்குள் அனைவருக்கும் நிலையான உணவு வழங்குவதும் இடம்பெற்றுள்ளது. இதில் கையெழுதிட Morrisonஅரசும் மற்றும் அமேரிக்கா, பிரேசில், சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளும் மறுத்துள்ளது.

அரசு net-zero carbon emissions நோக்கி நகர்வதாகவும், 2030-க்குள் 18 மில்லியன் டாலர்கள் GREEN ENERGY-காக செலவிடப்போவதாகவும் Prime Minister தெரிவித்து உள்ளார்.

இயற்கை பேரழிவை சந்தித்து வருகிறது.பல உயிரினங்கள் அழிவை நோக்கிச் செல்கின்றன.உகந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரும் என British Prime Minister Boris Johnson எச்சரிக்கை விடுத்துள்ளார்.

fossil fuelsகான மானியங்களை குறைப்பதாலும்,காடுகள்,விளைநிலங்களை மீட்டெடுப்பதாலும், உணவு விரையமாவதை தடுப்பாதாலும் இந்த பேரழிவைத் தடுக்க முடியும்.

ஓராண்டில் கிட்டத்தட்ட 1.3 பில்லியன் டன் உணவுகள் விரையமாக்கப்பட்டுள்ளது.காட்டு விலங்குகளும் தாவரங்களும் சுமார் 70 சதவீதம் குறைந்துள்ளது. இதை மேலும் தாமதிக்காமல் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.உலக நாடுகள் இந்த பாதுகாப்பு திட்டங்களை முறைப்படி செய்யத் தவறியதால் UN இந்த உறுதிமொழியைக் கொண்டுவந்துள்ளது.

வருங்கால மக்களுக்கு பாதுகாப்பான உலகை அளிக்கவேண்டியது நம் அனைவருடைய கடமை என்று Potsdam Institute for Climate Impact Research தலைவர் Johan Rockstrom தெரிவித்தார்.பல்லுயிர் இனங்களை காப்பதற்கும், இயற்கை அழிவை போக்குவதற்கும் அடுத்த ஆண்டு Paris-style agreement செயல்படுத்தப்படும் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.