Breaking News

இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலீபாவாக உதுமான் (ரலி) Uthman ibn Affan பதவியேற்ற தினம் இன்று. ( 06 நவம்பர் கி.பி. 644 )

இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலீபாவாக
உதுமான் (ரலி)
Uthman ibn Affan
பதவியேற்ற தினம் இன்று.
( 06 நவம்பர் கி.பி. 644 )

இவர் கி.பி 644 முதல் கி.பி 656 வரை ஆட்சி செய்தார். இவரின் ஆட்சியில் ஈரான், வடக்கு ஆப்பிரிக்கா, சிரியா மற்றும் சைப்பிரஸ் ஆகிய பகுதிகள் கைப்பற்றப்பட்டன. இவரது ஆட்சிக்காலத்தில்தான் இஸ்லாமிய ராணுவத்தில் கடற்படை உருவாக்கப்பட்டது. மேலும் திருக்குர்ஆன் தொகுக்கப்பட்டு இஸ்லாமியஆட்சி நடைபெற்ற அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்பட்டது.
இணைப்பில் துருக்கி Istanbul ல் உள்ள Topkapi Palace Museum ல் உதுமான் (ரலி) ல் தொகுத்து அனுப்பப்பட்டதாக கூறப்படும் குரான் பிரதிகளில் ஒன்று.

இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) ன் நெருங்கிய தோழரும், இரண்டாவது கலீபாவுமான உமர் இப்னு அல்-கத்தாப் (ரலி) மறைவுக்குப்பின் இவர் மூன்றாவது கலீபாவாக பதவியேற்றார்.