Breaking News

இளைஞர்கள் ஊரடங்கு இனவெறி தாக்குதல் நடத்துகின்றனர் -Ded Frecklington !

இரண்டு வடக்கு குயின்ஸ்லாந்து நகரங்களில் ,இளைஞர் ஊரடங்கு உத்தரவுத் திட்டம் இனவெறியின் வெளிப்பாடு என்று Queensland National Party தலைவர் Deb Frecklington தெரிவித்தார். தான் பழங்குடி சமூகத்தின் பிரதிநிதி என்றும் தனது கணவர் பழங்குடியினரிடம் பணிபுரிகிறார் என்றும் கூறினார்.

அக்டோபர் 31 அன்று மாநில அரசு தேர்ந்தெடுக்கப்பட்டால் Townsville மற்றும் Cairns-ல் உள்ள இளைஞர்களுக்கு LNP இரவு ஊரடங்கை ஆறு மாதங்களுக்கு அமல்படுத்தும் . குற்றங்களை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த ஊரடங்கை மீறும் இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள்.

அவர்களை மீட்க அவர்கள் குடும்பத்தார் 250 டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும். இந்தத் திட்டம் இனவெறியோடு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இலக்காக கொண்டது அல்ல என்று Ms Frecklington தெரிவித்தார். மக்கள் இதை இனவெறியாக பார்ப்பது கவலை அளிக்கிறது. மேலும் இது சிறுவர்கள குற்றம் செய்யாமல் தடுப்பதற்கான திட்டம் என்று அவர் தெரிவித்தார்.

2017 முதல் ஏராளமான குற்ற ஆராய்ச்சியை நடத்திய பின்னரே இத்திட்டத்தை கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.இந்த ஊரடங்கை தனது electorate காவலர்களும் Queensland மக்களும் ஆதரிப்பதாக அவர் கூறியுள்ளார்.

“நான் South Burnett-ல் இருந்து வந்திருக்கிறேன். எனது ஊர்காவலர்கள் இந்த திட்டத்தை விரும்புகிறார்கள். இதை நீட்டிக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள் என்று அவர் கூறினார்.Queensland மக்களிடம் கலந்து ஆலோசனை செய்து வருகிறோம்.

சில குற்றவாளிகளால் அவர்களது கார்கள் உடைக்கப்பட்டிருக்கிறது, மக்களின் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்கள். இவர்களை பிடிக்க சட்டம் இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்த காவலர்களிடம் நாங்கள் பேசினோம் என்று Ms Frecklington தெரிவித்தார்.