Breaking News

இருவழிப் பயணத்தை முடக்கியது நியூஸிலாந்து !

COVID-19 சமூகப் பரவல் அடியோடு அகற்றப்படும் வரை quarantine free பயணங்களை ஆஸ்திரேலிய பயணிகளுக்கு வழங்க முடியாது என நியூஸிலாந்து அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

NSW மற்றும் வடக்கு மாகாணங்கள் நியுஸிலாந்து பயணிக்களை அக்டோபர் 16 முதல் Quarantine இல்லாமல் பயணம் செய்ய அனுமதி அளிக்கும் என Australian Deputy Prime Minister Michael McCormack அறிவித்துள்ளார்.

கொரொனா வைரஸை முழுமையாக அகற்றும் பணியில் நியூஸிலாந்து மும்முரமாக இருக்கிறது. சமூகப்பரவல் முழுமையாக அகற்றப்படாமல் இருவழிப் பயணத்தை தொடர முடியாது என Prime Minister Jacinda Ardern தெரிவித்துள்ளார்.இதில் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

நியூஸிலாந்து மக்கள் ஆஸ்திரேலியாவிற்கு வந்து தங்கள் விடுமுறையை கழிக்கலாம் என்று திரு MCCormack தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நியூஸிலாந்து அரசு , மக்கள் தங்கள் வீட்டிலேயே விடுமுறை கழிப்பது தான் இந்த கொரோனா காலத்தில் பாதுகாப்பானது என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சனிக்கிழமையும் கொரொனா தொற்று புதிதாக யாருக்கும் ஏற்படவில்லை என நியூஸிலாந்து சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால், வரும் கூட்டத்தொடரில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டத்தை நியூஸிலாந்து அரசு செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.