Breaking News

இந்த கிருஸ்துமஸ் பண்டிகை கோவிட் இல்லா பண்டிகையாக இருக்கும்-Premier Daniel Andrews நம்பிக்கை !

இந்த வார இறுதியில் விக்டோரியாவின் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து Daniel Andrews முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகை கோவிட் இல்லா பண்டிகையாக இருக்கும் என Premier Daniel Andrews நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு தொற்று மட்டுமே பதிவாகியுள்ளது.உயிர் பலி எதுவும் இல்லை.இந்த புதிய தொற்று Preston Islamic College மாணவனின் பெற்றோருக்கு அவன் மூலம் பரவியுள்ளது.வியாழன் அன்று Broadmeadows-ல் உள்ள ஒரு சமூக வீட்டு வசதி கட்டிடத்தில் 86 பரிசோதனைகள் நடத்தப்பட்டு அனைத்தும் negative என்று அறிக்கை வந்ததாக விக்டோரியாவின் Contact tracing Chief Jeroen Weimar தெரிவித்தார். மேலும் 30 குடியிருப்பாளர்களுக்கு இன்னும் பரிசோதனை செய்யப்படவில்லை.

வீட்டில் இருந்து வெளியேறக்கூடாது என்ற அறிவிப்பு பலகை நீக்கப்பட்டுவிட்டது.இதனிடையில் East Preston Islamic கல்லூரியுடன் தொடர்புடைய 800 பேர் சுய தனிமைபடுத்துதல் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முடிந்தவரை பல பரிசோதனைகளை செய்து மீதமுள்ள கோவிட் தொற்று நோயாளிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என Mr Weimer தெரிவித்தார்.தென்மேற்கு விக்டோரியாவில் Ararat-ல் உள்ள கழிவு நீரில் வைரஸ் தொற்று இருப்பதை கண்டறிந்த பின்னர் அங்கு இருக்கும் மக்கள் நோய் அறிகுறிகள் இருக்கிறதா என்று கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

New South Wales மக்கள் மேலும் தளர்வுகளை எதிர்பார்க்கலாம். வழிபாட்டுத்தலங்களுக்கு செல்லவும், கூட்டம் கூடவும்,முன்பதிவுகள் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள்.கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக எந்த தொற்றும் பதிவாகவில்லை.

வெள்ளிக்கிழமை முதல் வெளியே கூடுபவர்களின் எண்ணிக்கை அளவு 20-ல் இருந்து 30 ஆக உயர்த்தப்படும். Group bookings 10-ல் இருந்து 30 ஆக உயர்த்தப்படும்.300 பேர் வரை வழிபாட்டுத் தலங்களில் அனுமதிக்கப்படுவார்கள்.

NSW கடந்த 24 மணி மணி முதல் இரவு 8 மணி வரை ஒரே ஒரு தொற்று பதிவு செய்த பின்னர் ,இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மக்கள் பொது போக்குவரத்தின் போது முகக்கவசம் அணிவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என Premier Gladys Berjiklian வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட Bathrust 100 motor race-ல் கலந்துகொண்ட மக்கள் South west Sydney-யில் உள்ள மக்கள் விழிப்புடன் நோய் அறிகுறிகளை கண்காணித்து செயல்பட வேண்டும்.மேலும், kingsford-ல் உள்ள South Juniors club, Century 21 Dixon Real Estate மற்றும் Royal Randwick Shopping Centre ஆகிய இடங்கள் கோவிட் தொற்று இருக்கும் இடங்களாக கண்டறியப்படுள்ளது.