Breaking News

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்களுக்கான நிதி உதவியை அளிக்கிறது ஆஸ்திரேலியா !

குடும்ப உறுப்பினர்களால் வீட்டில் வன்முறைக்கு ஆளாகி உயிர்பிழைத்த பெண்களுக்கு உதவ,அரசு 60 மில்லியன் டாலர்கள மதிப்பில் தெற்காசிய பெண்கள் முகாம் அமைக்கவுள்ளது. இதில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

Brisbane இல் உள்ள Sahara Houseக்கு $200,000 மேல் அரசு வழங்குகிறது. இந்தத் தொகை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க அரசு முதலீடு செய்த 340 மில்லியன் டாலரில் இருந்து வழங்கப்படுகிறது.

இந்த நிதி உதவி தனக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்ததாக Sahara Houseன் மேலாளர் Jatinder Kaur தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பிற்கு அரசு வழங்கும் முதல் நிதி உதவி இது.தற்போது 5 பெண்களும் குழந்தைகளும் தங்கும் அளவு வசதி கொண்ட இந்த இடத்தில் மேலும் மூன்று படுக்கையறை கொண்ட வீடுகளும்,ஒரு garage-ஐ புதுமைப்படுத்தி studio room-ம் கட்டத் திட்டமிட்டுள்ளனர்.

இது பார்ப்பத்ற்கு சிறிய உதவியாகத் தென்பட்டாலும், எங்களுக்கு இது மிகப்பெரிய உதவி என்று Jatinder Kaur தெரிவித்தார்.
வீட்டின் அளவையும் ,ஆட்கள் சேர்ப்பையும், இரட்டிப்பு ஆக்கி எங்களை நம்பி வரும் பெண்களுக்கு உதவ முடியும் என்றார்.

சமூக ஆர்வலர்களும் தன்னார்வக் குழுக்களும் சேர்ந்து நடத்தும் Brisbane இல் உள்ள Sahara Houseஇல் உள்ள ஒரு இடத்தில் தெற்காசிய பெண்களுக்காகவே நடத்தப்படுகிறது.இதில் பலர் புலம்பெயர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு ஆங்கிலம் தெரிவதில்லை. தங்களை போன்ற பலர் இந்த வீட்டில் இருப்பது அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த இந்தியர்களின் குடும்ப வன்முறைகள் பற்றி PhD படித்துக்கொண்டிருக்கும் Jatinder Kaur , பெண்கள் பாதுகாப்பிற்கு அரசு மேலும் பல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

கோவிட் தொற்று காலங்களில் குடும்ப வன்முறைகளுக்காக வரும் HELPLINE 1800 RESPECT அழைப்புகள் அதிகரித்துள்ளதாக,சமூக சேவைகள் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Safe Places funding பெறப்போகும் 40 திட்டங்களால் 6000 பெண்கள் மற்றும் குழந்தைகள் பயனடைவார்கள்.
“ஆஸ்திரேலியர்களை பாதுகாப்பதே Morrison அரசின் முதல் குறிக்கோள் .ஆனால், துரதிர்ஷ்டவசமாக வீடுகளில் உள்ள பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது” என்று குடும்பங்கள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் Anne Ruston தெரவித்தார்.

இந்த வன்முறையில் இருந்து தப்பித்து வாழ விரும்பும் பெண்களுக்கு இந்த முகாம்கள் அடைக்கலம் கொடுக்கும். பல பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வன்முறையில்லா மறுவாழ்வை அளிக்கும்.