Breaking News

ஆஸ்திரேலியா அரசு குடியுரிமைக்காக புதிய தேர்வுகளை அறிவித்துள்ளது !

குடியுரிமை தேர்வை அறிவித்து உள்ளது ஆஸ்திரேலியா !இதெல்லாம் ஒத்து வருமா ?

நவம்பர் மாதம் நடுவிலிருந்து ஆஸ்திரேலியா மதிப்பு குறித்த சிறப்பு பிரிவுகள் ,குடிமக்களுக்கான தேவைகள் அனைத்தும் சேர்க்கப்படும் என்று ஆஸ்திரேலியக் குடியுரிமை தினத்தன்று அரசாங்கம் அறிவித்துள்ளது.கடந்த வியாழனன்று, ஆஸ்திரேலியா குடியுரிமை தினத்தை முன்னிட்டு புதிய சட்டங்கள் மற்றும் குடியுரிமைக்கான புதிய கேள்விகளை குடிவரவு அமைச்சர் Alan tudge அறிவித்துள்ளார்.மேலும் இந்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட மக்களுக்கும், மற்றும் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட குடிமக்கள் இச்சட்டத்தால் எந்த விதமான பாதிப்பையும் சந்திக்க மாட்டார்கள் என்று Alan கூறியுள்ளார்.

நவம்பர் 15 முதல் இக்கேள்விகள் செயல்படுத்தப்படும். பேச்சு சுதந்திரம், சுயமரியாதை, வாய்ப்பின் சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் முக்கியத்துவம் சார்ந்த கேள்விகள் முன்வைக்கப்படும். மேலும்,ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற ஆசை கொண்டவர்கள் இக்கேள்விகளை சரியாக கையாள வேண்டும் என்று Alan கூறியுள்ளார். 5 புதிய கேள்விகளை சேர்த்து மொத்தம் 20 கேள்விகள் கேட்கப்படும். குடியுரிமை பெற ஆசை கொண்டவர்கள் அந்த 5 கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்து குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று அந்நாட்டின் அரசு முடிவு செய்துள்ளது.

எந்த மாதிரியான கேள்விகள் இதில் அடங்கும் (example questions ):

அனைத்து ஆஸ்திரேலிய குடிமக்களும் ஏன் கூட்டாட்சி அரசுக்கு வாக்களிக்க வேண்டும்?

ஆஸ்திரேலியாவில் ஒருவரை இனரீதியாய் வன்கொடுமை செய்தால், அவர் அதை எதிர்த்து வன்முறையில் ஈடு படவேண்டுமா?

மக்கள் விவாதத்தில் ஈடுபடும்போது பார்ப்பவர்கள் பொறுத்துகொள்ள வேண்டுமா?

ஆஸ்திரேலியா மக்களுக்கு தன் வாழ்க்கை துணையை தேர்தெடுக்க சுதந்திரம் உண்டா? இல்லையா ?

ஆஸ்திரேலியா மக்கள் ஆங்கிலம் கற்பது அவசியமா?

ஆஸ்திரேலியாவில் மனைவி தன் கணவரை மதிக்காவிட்டால், அக்கணவர் தன் மனைவிக்கு எதிராக வன்முறையில் ஈடுபட வேண்டுமா?

ஆண், பெண் சமத்துவம் ஆஸ்திரேலியாவில் இருக்க வேண்டுமா?

மக்களின் கருத்துரிமைக்கு மதிப்பு தர வேண்டுமா?

இவை அனைத்தும் மாதிரி வினாக்கள் தான் ,உண்மையான கேள்விகள் அல்ல ,பதில்களில் தேர்ந்தெடுக்க தொடர்பான கூடுதல் பதில்களும் கொடுக்கப்படும் .

நிரந்தர குடியிருப்பு மற்றும் குடியுரிமைக்கான வித்யாசங்கள் :

நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு வாழவும்,படிக்கவும்,வேலைசெய்யவும் உரிமை உண்டு. ஆனால், ஒரு ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டுக்கு உரிமை இல்லை.

நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய எந்த உரிமையும் கிடையாது. மேலும் நிரந்தரமாக அங்கேயே, வாழ்வதற்கு விசா கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால், குடிமக்கள் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறவும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நுழையவும், வெளியேறவும் முடியும்.அதே சமயம், குடிமக்கள் மாநில கட்சிகளுக்கு வாக்களிக்கலாம், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட செய்யலாம் மற்றும் தன் பிள்ளைகளுக்கு ஆஸ்திரேலியா குடியுரிமையும் பெற்று தரலாம். அதே சமயம் ,குடிமக்கள் வெளிநாடுகளில் சிக்கலில் இருந்தால்,ஆஸ்திரேலிய தூதரகதின் உதவியும் நாடலாம்.

1949 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆஸ்திரேலிய குடிமக்களாக மாறியுள்ளனர்.கடந்த ஐந்து ஆண்டுகளில், 686,000 க்கும் அதிகமான மக்களுக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது, இதில் 2019-20 ஆம் ஆண்டில் 204,000 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றது.