Breaking News

ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன?

வழக்கமாக புத்தாண்டுக்கு முன்னிரவு நடைபெறும் கொண்டாட்டங்களுக்கு கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தடையாக இருக்கின்றது . நாட்டில் அமலில் இருக்கும் சமூக விலகல் விதிகளின்படி, புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பன பின்வருமாறு பார்ப்போம் .

Northern Beaches

கொரோனா பரவலின் மையமாக விளங்கும் Northern Beaches-ல் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. வடக்குப் பகுதியில் வசிப்பவர்கள் வரும் ஜனவரி 9ஆம் தேதி வரை அத்தியாவசிய பணிகளை தவிர்த்து தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.அதே பகுதியில் இருந்து குழந்தைகள் உட்பட 5 நபர்களை, அவர்கள் விருந்துக்கு அழைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு பகுதியில் , அதே பகுதியை சேர்ந்த குழந்தைகள் உட்பட 10 பேர்களை விருந்துக்கு அழைக்கலாம் என்றும், ஆனால் பிற பகுதியில் இருந்து வரும் விருந்தினர்களை அழைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலுள்ள பார்கள் மற்றும் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Greater Sydney

வீடுகளில் குழந்தைகள் உட்பட 10 பேர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளியிடங்களில் 50 நபர்கள் மட்டும் கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த கட்டுப்பாட்டு விதிகள் பின்பற்றபடுதலை கண்காணிக்க காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வீடுகளிலேயே அமர்ந்து தொலைக்காட்சி நேரலை வழியாக நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகரத்திற்குள் வர முன் அனுமதி இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது Covid-19 பணியாளர்களை கௌரவப்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் தற்போது ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Victoria

நீண்டகால முடக்குதலினால் பாதிக்கப்பட்ட விக்டோரியாவில், கடந்த 60 நாட்களாக எந்தவித சமூக தொற்றுகளும் காணப்படவில்லை. வீடுகளில் 30 பேரும், வெளியிடங்களில் 100 நபர்களும் கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான வாடிக்கையாளர்களைக் கொண்டு பார்கள், ஹோட்டல்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. Melbourne-ல் நடைபெறும் வருடாந்திர பட்டாசு நிகழ்ச்சி, இந்த முறை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Queensland

பல நாட்களாக Corona virus சமூகப் பரவல் இல்லை என்பதால், இங்கு வீடுகளில் 50 விருந்தினர்கள் கூடவும், வெளியிடங்களில் 100 நபர்கள் கூடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

South Australia

2 sq.m -க்கு ஒருவர் என சமூகவிலகல் விதிகளை பின்பற்றி, வீடுகளில் 50 விருந்தினர்களை அழைக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளியிடங்களில் இதே சமூகவிலகல் விதிகளை பின்பற்றி, 200 நபர்கள் கூடலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Western Australia

இங்கும் இதே சமூக விலகல் விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், கூடும் மக்கள் எண்ணிக்கையில் எந்தவித கட்டுப்பாடு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tasmania

இதய சமூக விலகல் விதிகளை பின்பற்றி, உள் அரங்குகளில் 250 நபர்கள் கூடவும், வெளி அரங்குகளில் 1000 நபர்கள் கூடவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.

Northern Territory & ACT

கூடும் மக்களின் எண்ணிக்கையில் எந்தவித கட்டுப்பாடுகள் இல்லை என்றும், ஆனால் சமூகவிலகல் விதிகளை பின்பற்ற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. Canberra-வில் வெளி அரங்குகளில் கூடும் மக்களின் எண்ணிக்கை 500 ஆக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.