Breaking News

ஆஸ்திரேலியாவின் NSW குடியிருப்புகள் குயின்ஸ்லாந்தின் தெற்கு எல்லை வரை விரிவாக்கபடுகிறது!

ஆஸ்திரேலியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றான NSW-வில் இப்பொழுது புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதால் அதனைச் சுற்றியுள்ள குயின்ஸ்லாந்து மற்றும் இதர மாநில எல்லைகள் விரைவில் திறக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு NSW கொரானா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் அதே சமயம் சவுத் ஆஸ்திரேலியாவும் NSW உடன் சேர்ந்து கட்டுப்பாடுகளை வரும் புதன்கிழமை இரவிலிருந்து தளர்த்த உள்ளது. மேலும் NSW வில் வசிப்பவர்கள் இனி 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் அவசியம் இல்லை.

திங்கட்கிழமை 7616 பேருக்கு செய்யப்பட்ட நோய்த்தொற்று சோதனையில் கடந்த 24 மணி நேரத்தில் 2 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 8ஆம் தேதிக்கு பிறகு முதல் முறையாக எந்த ஒரு புதிய தொற்றுகளும் NSW வில் இல்லாமல் இருப்பது மருத்துவக் குழுவை மட்டுமல்லாமல் மக்களையும் பெருமூச்சு விட செய்துள்ளது.

இவ்வாறு எல்லைகளில் ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்து முடிவை வரவேற்கும் வகையில் Scott Morrison கூறியதாவது, நல்ல முடிவு ,பொது அறிவாய் செயல்பட்டு உள்ளீர்கள் என இந்த சிறப்பான முடிவெடுத்ததற்கு தனது வரவேற்பை அளித்துள்ளார்.இவ்வாறு ஊரடங்கு தளத்தப்படுவதை பற்றி புகழ்ந்து பேசிய பிரதம மந்திரி, குறிப்பாக Steven Marshallயையும் அவரது முடிவையும் புகழ்ந்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.NSW வில் வசிக்கும் 125,000 பேரும் எப்போது வேண்டுமானாலும் குயின்ஸ்லாந்துக்கு சுதந்திரமாக வந்து செல்லலாம் என Ms Plalaszczuk தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிர்வாகக்குழு NSW உடன் இணைந்து எல்லையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதை வரும் புதன்கிழமை இரவுவிலிருந்து அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இதைப்பற்றி Marshall கூறுகளில்,” இனிவரும் காலங்களில் தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. இந்த தளர்வுகள் இரு நாடுகளுக்கு இடையே இந்த மிகப் பெரிய சுமையை தடுப்பதாகவும், அதுமட்டுமல்லாமல் பொருளாதார அடிப்படையிலும் குடும்ப அடிப்படையிலும் இது மிகப்பெரும் உதவியாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சிட்னி சௌத்வெஸ்ட்டில் கொரானா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வந்து சென்றதற்காக அப்பகுதி முற்றிலும் மூடப்பட்டு பராமரிப்பின் கீழ் உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட அந்த நபரை செப்டம்பர் 14ஆம் தேதி Moorebank sports club அனுமதிக்கவில்லை என NSW சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..

மேலும் அந்த க்ளபுக்கு வந்து சென்ற அனைவரையும் பரிசோதித்து பார்த்ததில் அனைவருக்கும் தொற்று இல்லை என முடிவு வந்ததையடுத்து, கொரானா தொற்றுடன் வந்து சென்ற நபரை கண்டு பிடிப்பதிலும் அவருடன் இணைப்பில் இருந்தவர்களை கண்டறிவதிலும் NSW சுகாதாரத்துறை மிகத் தீவிரம் காட்டி வருகிறது. ஒருவேளை அந்த நபருடன் யாராவது நெருங்கிய தொடர்பில் இருந்திருந்தால் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் சோதனை முடிவில் நெகட்டிவ் என வந்தாலும் கூட என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.