Breaking News

ஆயிரக்கணக்கான வேலை இழந்த பல்கலைக்கழகங்களுக்காக, அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கிறது கூட்டாட்சி அரசு !

வகுப்பறைகளில் யாரு பாடம் எடுப்பது? NTEU நேஷனல் பிரசிடன்ட் Alison Barnes காட்டம் ! நடவடிக்கை எடுக்குமா அரசு ?

ஆஸ்திரேலியன் பல்கலைக்கழகங்களில் பணியாற்றக் கூடிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ,அதிகமான கொரானா நோய் தொற்று பரவல் காரணமாக வேலை இழந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் இப்பொழுது கூட்டாட்சி அரசை அணுகியுள்ளனர். இதன் மூலம் கிட்டத்தட்ட 11,000 தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியன் நேஷனல் யூனிவர்சிட்டி (ANU )மற்றும், யூனிவர்சிட்டி ஆஃப் நியூ சவுத் வேல்ஸ் (UNSW ) சமீபத்தில் கொடுத்த அறிக்கையின் படி, சுமார் 471 வேலைகள் இதற்கிடையில் சர்வதேச மாணவர்கள், அவர்களின் சராசரி வருமானத்தை இழந்து உள்ளனர்.The National Tertiary Education Union (NTEU) கணக்கின் படி,பல்கலைக்கழகங்களில் வேலை இழந்தோரின் எண்ணிக்கை சுமார் 10,000 பேராக இருக்கிறது என கணக்கிடப்பட்டுள்ளது.

வேலையில்லாத பிரச்சனையெல்லாம் ஒருபக்கம் இருக்க, தொழிலாளர் கல்வி பேச்சாளர் Tanya Plibersek மேற்கல்வி நிறுவனங்களுக்கான தொகையை உயர்த்தாதற்காக கூட்டாட்சி அரசை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார்.நாட்டிலேயே நான்காவது மிகப்பெரிய ஏற்றுமதி தொழிற்சாலைகளான நிலக்கரி , எரிவாயு , இரும்பு போன்றவை சமீபகாலமாக மிகப் பெரிய சரிவை சந்தித்து வரும் நிலையில், அதில் பணியாற்றி வந்த பணியாளர்கள் இப்பொழுது வேலையின்மையால் திண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு கட்டாயம் ஏதாவது உதவி செய்து, அவர்களுக்கு வேலை தர வேண்டுமென தனது கருத்தை கூறியுள்ளார்.

மேலும் யுனிவர்சிட்டி முதலாளிகளும், அரசை எதிர்நோக்கி சில சலுகைகளையும், உதவிகளையும் செய்வார்கள் என காத்துக் கொண்டிருக்கின்றனர்.இது குறித்து RMIT கூறியிருப்பதாவது,” சமீபத்தில் சுமார் 355 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு மேற்பட்டவர்கள் இப்பொழுது பரிசீலனையில் தேவைப்படும் அளவிற்கு உள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர்”.

NTEU சமீபத்தில் கூறியுள்ளதாவது ,” 11,000 பேர் வேலை இழந்துள்ளது என்பது மிகவும் மதிப்புகள் குறைத்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இன்னும் வேலை இழந்தோரில் பலரின் டேட்டாக்கள் இதுவரை அப்டேட் செய்யவில்லை” எனவும் தெரிவித்துள்ளது.NTEU நேஷனல் பிரசிடன்ட் Alison Barnes இதைப் பற்றி பேசுகையில்” அரசு பல்கலைக்கழக துறையை கைவிட்டுள்ளது” என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் நாங்கள் அனைவரும் மருத்துவமனையின் வாசலில் வரிசையில் நின்று கொண்டிருக்கிறோம், வகுப்பறைகளில் யாரு பாடம் எடுப்பது என காட்டமாக தனது கேள்விகளை தொடுத்துள்ளார். இதனால் தனது அடுத்த கட்ட நடவடிக்கையை அரசு எடுக்கும் என அனைவரும் எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கின்றனர் .