ஆன்லைன் உணவு விநியோகம் மீது 6 விதமான பாதுகாப்பு விசாரனைகளுக்கு பிறகு, NSW 65 பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில், NSW-வில் ஆன்லைன் உணவு விநியோகம் 65க்கும் மேற்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் சம்மந்தப்பட்டுள்ளது. சில இறப்புகளுக்குப்பின் ஆஸ்திரேலியாவின் food delivery நிறுவனங்கள் அரசின் கண்காணிப்பின் கீழ் வந்தது.
கடந்த ஒரு வருடத்தில் uber மற்றும் deliveroo போன்ற ஆன்லைன் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது 3 பாதுகாப்பின்மை போன்ற புகார்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும் இது பாதுகாப்பின்மையின் ஒரு பகுதியென தொழிலாளர்கள் சங்கம் குரலெழுப்பியுள்ளனர்.
மேலும் இந்த இறப்புகள் தொழில் துறையில் நாம் எந்த அளவுக்கு நெருக்கடியில்,மற்றும் கவனமிமையில் இருக்கிறோம் என்று எடுத்து காட்டுகிறது என்று TWU national secretary Michael Kaine செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுவே முக்கிய காரணமாக நாங்கள் கருதுகிறோம், மேலும் இந்த நிறுவனங்கள் பாதுகாப்பு அறிவுரைகள் குறித்த பொறுப்புகளை அறிந்திருக்கவில்லை என்று கூறினார். அதிகப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள் பதிவாகியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
6 விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆன்லைன் உணவு விநியோகம் நிறுவனங்கள் மீது செயல்பட்டு ஆராயப்படுகிறது. delivery செய்பவர்கள் மீதான 65க்கும் மேலான ஒழுங்கு நடவடிக்கைகளை விவரிக்க இயலாது, மேலும் இது 6 விசாரணை வட்டங்களுக்குள் உள்ள நிறுவனங்களின் பெயர்களை சொல்ல மறுத்து விட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் 5 online food delivery செய்யும் நபர்கள் ஆஸ்திரேலியாவில் இறந்துள்ளனர். இவர்களின் நான்கு பேர் சிட்னியை சேர்ந்தவர்கள்.
இது south wales-ன் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்கு துறையினால் வழி நடத்தப்படும். இந்த குழு பாதுகாப்பை மேம்படுத்தவும், அபாயகரமான நினைவுகளை தவிர்க்கவும் செயல்படும். நாட்டின் முக்கிய ஆன்லைன் உணவு விநியோகம் செய்யும் நிறுவனமான deliveroo , தாங்கள் பாதுகாப்பு கடமைகளில் தீவிரம் காட்டுவதாக கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் தாங்கள் செயல்படுவதாகவும், பாதுகாப்பு மற்றும் சுகாதார அக்கறையுடனும் பொறுப்புடனும் செயல்படுவதாக கூறியுள்ளது.
சாலை பாதுகாப்பு என்பது சிக்கல் நிறைந்தவை. இதை சீர்செய்ய வல்லுநர்கள் மற்றும் அரசாங்கத்தின் உதவிகள் தேவைப்படுகிறது. இதனையடைய பங்கீட்டாலர்களுடன் இணைந்து பணியாற்றும் கடமையில் உள்ளோம், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு uber நிறுவனம் பதிலளிக்க மறுத்துவிட்டது. நடந்து முடிந்த சம்பவங்களுக்கு பிறகு உள்ள இந்த பாதுகாப்பு பணிகள் வரவேற்கத்தக்கது, மேலும் ஏற்கனவே ஒருவர் இறந்த நிலையில் ஒருவர் காயம் அடைந்துள்ளார், இதன் பிறகே அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர் என Kaine தெரிவித்தார்.
இந்த அமைப்பானது, தொழிலாளர்கள் பாதுகாப்பின்மை, குறைந்த ஊதியம், குறித்த காலத்தில் ஊதியம் வழங்குதல் போன்றவற்றை விசாரிக்க அழுத்தமான கோரிக்கைகளை விடுத்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த Industrial Relations Minister Christian Porter பணியிட சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பது மாநில பிரச்சனையாக உள்ளது என்று பதிலளித்தார்.