Breaking News

அறிவித்ததை விட முன்பாகவே கட்டுப்பாடு தளர்வுகள் செய்ய முடிவு !

விக்டோரியாவில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸால் மரணமடைந்து உள்ளனர் , இது மாநில எண்ணிக்கை 771 ஆகவும், தேசிய எண்ணிக்கை 859 ஆகவும் இருந்தது, தினத்தோறும் ஏற்படும் புதிய வழக்குகள் 15 ஆகக் குறைந்துள்ளது.மெல்போர்னுக்கான 14 நாள் புதிய சராசரி கணக்கீட்டில் வழக்குகள் 30லிருந்து 29.4 க்கும் குறைந்தது, ஒருசில பகுதிகளுக்கு இது 1.1 ஆக குறைந்துள்ளது.

கடந்த 14 நாட்களில் கொரோனா எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது. மெல்போர்னில் 41 ஆக எண்ணிக்கைகள் குறைந்தது.அடுத்த திங்கட்கிழமை கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முன்பு மெல்போர்னின் புதிய தொற்றுகள் சராசரி 30 முதல் 50 வரை இருக்கவேண்டும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். இதை குறித்து ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறப்பு அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

மெல்போர்னின் ஒருசில பகுதிகளில் செப்டெம்பர் 14 அன்றே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். இத்தளர்வுகளிற்கு கீழ் இரண்டு வீடுகளைச் சேர்ந்த ஐந்து பேருக்கு பொதுக் கூட்டங்கள் அனுமதிக்கப்படும். பள்ளிகள், குழந்தை பராமரிப்பு மற்றும் சில பணியிடங்கள் திறக்கப்படும், தனிப்பட்ட பயிற்சியாளர்கள் இரண்டு வாடிக்கையாளர்களுடன் செயல்பட முடியும் என்றும் தலைவரையும் சேர்த்து ஐந்து பேர் வரை வெளிப்புற மத சேவைகள் நடக்கக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.

புதன்கிழமை, மாநில அரசு மனநலம் காப்பதற்கான சுகாதார சேவைகளுக்கான கூடுதல் $ 21.3 மில்லியன் நிதியை அறிவித்தது.மேலும்,ஆண்ட்ரூஸ் ஒருசில பகுதிகளில் பணிபுரிந்த மெல்போர்ன் குடியிருப்பாளர்களைச் சுற்றியுள்ள விதிகளை தெளிவுபடுத்தினார். அவர்கள் தொழிலாளர் அனுமதி சீட்டை பெற்றிருக்க வேண்டும், மேலும் அவர்கள் மெல்போர்னின் கடுமையான நடவடிக்கைகளுக்கு இணங்க வேண்டும். அந்த அனுமதி சீட்டு இல்லாமல் ஒரு மெல்போர்ன் தொழிலாளி கூட உணவகத்திற்கு உணவுக்காக செல்ல முடியாது.

மெல்போர்ன் மற்றும் பிராந்திய பகுதிகளில் 50 வயதான மக்களின் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்த மாநில அரசு செவ்வாயன்று $ 30 மில்லியன் தொகுப்பை வெளியிட்டது.இதற்கிடையில், மெல்போர்னின் கொரோனா தடமறிதல் மையங்களில் வரும் மூன்று நாட்களில் திறக்கப்படும் என்றும் அரசு தெரிவித்து உள்ளது..

வெஸ்டர்ன் ஹெல்த் (மேற்கு), ஆஸ்டின் ஹெல்த் (வடகிழக்கு) மற்றும் மோனாஷ் ஹெல்த் (தென்கிழக்கு) ஆகிய மையங்களை வழி நடத்த வேண்டும் என செப்டம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.