Breaking News

அரசின் முதல் வீட்டுக்கடன் திட்டம் 10,000 இடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது !

மத்திய அரசு திட்டத்தின் விரிவாக்கம் மூலம், முதல் முறை வீடு வாங்கும் 10000 நபர்கள் 5 சதவீத வைப்புத்தொகையை சேமித்தால் போதுமானது.முதல் வீட்டுக்கடன் வைப்புத்தொகை திட்டம் வரும் செவ்வாய் இரவு பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் பயன்பாட்டுக்கு வரும்.இத்திட்டம் அடுத்தாண்டு ஜூன் 30 வரை தொடரும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் மூலம் முதல் முறை வீடு வாங்கும் நபர்களுக்கு வீட்டுக்கடனில் 15 சதவீத கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும்.
இத்திட்டம் மூலம் 20,000 மக்கள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர்.

புது மனை கட்டுவதற்கும் அல்லது வீடு கட்டும் இதர வேலைகளுக்கும் Homebuilder 25000 டாலர்கள் வழங்குகின்றனர்.இதை வீட்டுக் கடன் வைப்புத்தொகையுடன் பயன்படுத்தலாம் என Treasurer Josh Frydenberg தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திட்டத்தால் painters, builders மற்றும் electrcians போன்ற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
இந்த கொரோனா தொற்று காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க,ஐந்து சதவீத GDP உள்ள கட்டடத்துறை வணிகத்தின் வளர்ச்சி அவசியமானது.

இந்த திட்டத்தின் முதல் சுற்றில் கடன் வைப்புத்தொகை சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.950,000 டாலர்கள் சிட்னிக்கும், 850,000 டாலர்கள் மெல்பர்ன் நகருக்கும், 650,000 டால்ர்கள் ப்ரிஸ்பேனுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசிற்கு 200 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறையும் 1 trillion டாலர்கள் கடனும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது . இந்த கொரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை போக்க அரசு முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

அதனால் மேலும் வருமான வரி குறைப்பு, கூடுதல் தொழிலாளர்களுக்கு ஊதிய மானியம் வழங்குதல், உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது போன்ற திட்டங்களை அரசு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் வேலையின்மை 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.அதிகபட்சமாக SA, QueensLand, Victoria மாகாணத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் சதவீதம் 14.3 ஆகும்.

ஆஸ்திரேலிய பொருளாதாரம் ஜூனில் 7 சதவீதமாக குறைந்துள்ளது.நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளது என்பதை இது உறுதி செய்கிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசு JobKeeper மானியத்தை குறைப்பதும், Job Keeper கட்டணத்தை உயர்த்துவதும் தொழிலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.ஒரு விரிவான வேலைத்திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்தும் சாதகமான முடிவிற்கும் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.