Breaking News

அரசாங்க விமான நிலையம் நில ஒப்பந்தத்தில் ஊழல்: விசாரணையில் வெளிவந்த உண்மைகள் !

அரசாங்க விமான நிலையம் நில ஒப்பந்தத்தில் ஊழல்: விசாரணையில் வெளிவந்த உண்மைகள் !

சர்ச்சைக்குரிய அரசாங்க விமான நிலைய நில ஒப்பந்தம் குறித்த தனது விசாரணையில் Australian Federal Police மோசடி மற்றும் ஊழல் தொடர்பான விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளது.

மேற்கு சிட்னி விமான நிலையத்திற்கு அருகிலுள்ள 3 மில்லியன் டாலர் மதிப்புள்ள Leppington Triangle நிலத்தை 30 மில்லியன் டாலர்களுகு வாங்கியது தொடர்பாக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.மத்திய அரசு மோசடி செய்திருக்கலாம் என Auditor General, Senate Estimates இடத்தில் தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய தேசிய தணிக்கை அலுவலகம் இது போன்ற ஒரு பரிந்துரையை வழங்கியது இதுவே முதல் முறை என்று AFP Commissioner Reece Kershaw தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் இந்த சொத்து ஏமாற்றி விற்கப்பட்டதா அல்லது அதிகாரிகள் ஊழல் செய்தார்களா என்பது விசாரிக்கப்படும் என AFP deputy commissioner Ian McCartney தெரிவித்தார்.நிலத்தின் உண்மையான மதிப்பிற்கும் அதன் விற்பனை விலைக்கும் உள்ள வேறுபாடே இந்த விசாரணையின் மையப்புள்ளி என்று அவர் தெரிவித்தார்.

இதுவரை குற்றவாளிகள் என்று யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதில் அனைவரும் விசாரிக்கப்படுவார்கள். யாரும் விதிவிலக்கு அல்ல. எங்களது கவனம் section 142 பொது அதிகாரிகளின் ஊழலை மையப்படுத்தி இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர், 2018 ஆம் ஆண்டு Leppington Pastoral நிறுவனத்திற்கு 12.26 ஹெக்டர் நிலத்தின் மதிப்பைவிட 10 மடங்கு செலுத்த Infrastructure துறை ஒப்புக்கொண்ட நிகழ்வுடன் இந்த சர்ச்சை தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக 256 GB மதிப்புள்ள தகவல்களை கொண்ட 800க்கு மேற்பட்ட கோப்புகளை ANAO AFB-க்கு வழங்கியுள்ளது.
என்ன நடந்தது என்பதை ஆழமாக அறிந்துகொள்ள என் சார்பாக ஒரு independent auditor-ஐ நியமித்துள்ளேன்.உண்மையை விரைவில் வெளிக்கொண்டு வருவேன் என Infra Structure துறை அமைச்சர் Simon Atkinson தெரிவித்துள்ளர்.இந்த ஊழல் சம்பவம் தற்போது மக்களிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.