Breaking News

அமெரிக்க துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி -கமலா ஹாரிஸ்

அமெரிக்கத் தேர்தல் விவகாரமும் வெற்றியும் உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஜனநாயக வெற்றி என்பது Joe Biden ஜனாதிபதியாக இருப்பார் என்பதோடு மட்டுமல்லாமல், கமலா ஹாரிஸ் துணைத் தலைவராக இருக்கும் முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் .

கமலா ஹாரிஸ்க்கு பல பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் வெற்றி வரலாறு காணாத வெற்றியாகவே கருதப்படுகின்றது.

California-வில் முதல் கறுப்பின பெண் attorney-general-ஆக இருந்தார், பிறகு தெற்காசியாவில் முதல் பெண்மணி US Senate-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவில், சென்னையில் பிறந்த கமலா ஹாரிஸ் , தனது 19 வயதின் போது doctoral program தொடங்குவதற்காக UC Berkeley அமெரிக்காவுக்குச் சென்றார். அப்பொழுது தனது தாய் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை பகிரங்கமாக பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

எது சரி எது தவறு என்று எனக்கும் என் சகோதரி மாயாவிற்கும் சொல்லிக் கொடுத்த ஒரே உறவு தன் அம்மா தான் என்றும் கடின உழைப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் அவரே சொல்லிக்கொடுத்தார் என்றும் அவர் பெருமையுடன் கூறினார்.

இந்த தேர்தலில் வென்ற பிறகு, Mr Biden என்று பெயர் சொல்லி அழைக்கும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்..

கமலா ஹாரிஸ் மட்டுமல்லாமல் அவரது கணவர் (entertainment lawyer Douglas Emhoff) முதல் பெண் துணை ஜனாதிபதியின் கணவர் என்ற பெருமையையும் வரலாற்றையும் உருவாக்கியுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தன் மனைவியை கட்டியணைத்து “உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார்.

Trump-பை நிராகரித்தால் மட்டுமே அமெரிக்கா வளர்ச்சி அடைய முடியும் என்றும் அமெரிக்காவின் மறுபக்கத்தை காண முடியும் என்றும் வாக்காளர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் வெற்றியை தொடர்ந்து ,இந்த சந்தோஷத்தை பல ஹாலிவுட் பிரபலங்களும் தங்களது சந்தோஷத்தை சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்து வெற்றியை கொண்டாடினர். மேலும் வெற்றி பெற்ற Joe Biden மற்றும் Kamala Harris-சுக்கும் வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை Mindy Kaling தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகளின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கமலா ஹாரிஸ் பார்ப்பதற்கு நம்மைப் போல் இருக்கிறார் என்று கண்ணீருடன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.