Breaking News

“அனைத்துமே அரசியல்”- Josh Frydenberg-ஐ வெளுத்து வாங்கி தாக்கிப் பேசிய Daniel Andrews !

கொரோனா பேரிடருக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை விரைவில் நீக்காமல் ஆஸ்திரேலிய மக்களின் வேலைவாய்ப்பை கேள்விக்குறியாக்கிய விக்டோரியாவை மோரிசன் அரசு கடுமையாக விமர்சித்துள்ளது.

இதை எதிர்த்து பேசிய விக்டோரியன் Premier Dan Andrews, மத்திய பொருளாளர் Josh Frydenberg சுகாதாரத்தை விடுத்து அரசியல் பேசுவதாக குற்றம் சாட்டினார்.ஒரு நாளுக்கு ஆயிரம் வேலைகள் பறிபோய்கொண்டிருப்பதாகவும் இது மன்னிக்கமுடியாது என்றும் திரு frydenberg குறிப்பிட்டு உள்ளார்.

“மாநில அரசு அனைத்து ஆதாரங்களையும் அளந்து பார்க்க வேண்டும்.இது எல்லாமே அரைசியல்தானே. அதை மட்டும் தான் அவர் செய்கிறார்.அவர் தலைவர் இல்லை. அவர் ஒரு liberal “என்று திரு Andrews சரமாரியாக விமர்சித்து உள்ளார்.

விக்டோரியா தனது வரம்புகளை உயர்த்துவதன் மூலம் நாடு பயனடையக் கூடும் என common wealth வங்கியின் தலைவர் Matt Comyn தெரிவித்தார்.மேலும் மெதுவாக செயல்படுத்தப்படும் ஊரடங்கு தளர்வுகள் சிறு வியாபாரிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சிகை அலங்காரம்,சுகாதார நிபுணரை பார்ப்பது, கார் கழுவுதல் போன்ற சேவைகளை Melbourne மக்கள் தற்பொழுது பெற முடியும்.ஆனால் சில்லறை மற்றும் விருந்தோம்பல் வணிகங்கள் மீண்டும் திறக்க நவம்பர் 2 வரை காத்திருக்க வேண்டும்.கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருந்தால் மற்ற தளர்வுகள் நீக்கப்படலாம் என Andrews தெரிவித்தார்.

திங்களன்று விக்டோரியாவில் 4 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளது,பலி எண்ணிக்கை ஒன்றாக உள்ளது . இதனால் தேசிய அளவு எண்ணிக்கை 905ஆக உள்ளது.NSW-வில் கடந்த 24 மணியிலிருந்து இரவு 8 மணி வரை புதிய உள்நாட்டு தொற்றுகள் ஏதும் பதிவாகவில்லை.வெளி நாட்டில் இருந்து திரும்பிய பயணிகளில் 4 தொற்றுகள் ஹோட்டலில் தனிமை படுத்தப்பட்டவர்களிடம் கண்டறியப்பட்டது.

இந்த எண்ணிக்கை 7000 பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிப்பிடத்தக்கது. மேலும் ஸ்வாசக் கோளாறு கண்டறியப்பட்டவர்கள் உடனடி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என NSW சுகாதரத் துறையை வலியுறுத்தி வருகின்றது.

வெளியில் கூடுவோரின் எண்ணிக்கை 20-ல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.டிசெம்பர் முதல் திருமணங்களில் அனுமதிக்கப்படும் விருந்தினரின் எண்ணிக்கை 300 ஆக உயர்த்தப்படும்.

Brisbane புறநகர் பகுதியிலும், சில கடற்கரை பகுதிகளிலும் கழிவு நீரில் வைரஸ் தடையங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு அறிகுறிகள் இருக்கும் மக்களை பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர் .ஆனால் Queenland-ல் எந்த புதிய தொற்றும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.