Breaking News

அடுத்த மாதத்திலிருந்து ஆஸ்திரேலியர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் -ஸ்காட் மோரிசன் அறிவிப்பு !

மருத்துவ நிபுணர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் புதிய ஆலோசனையைப் பின்பற்றி ஆஸ்திரேலியர்கள் பிப்ரவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசிகள் கொடுக்கப்படும் என்று ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.ஜனவரி இறுதிக்குள் தகுந்த ஒப்புதலுடன் தேவையான அனைத்து சிகிச்சை பொருட்களையும் developer Pfizer-இடமிருந்து சிகிச்சை பொருட்கள் நிர்வாகம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது சாதாரண தடுப்பூசி ஒப்புதல் செயல்முறைகளை விட வேலைகள் அனைத்தும் வேகமாக நடக்கின்றது என்று திரு.மோரிசன் கூறினார் . மற்றொரு தடுப்பூசி தொடர்பான ஒப்புதல் செயல்முறைகள் பிப்ரவரியில் முடிவடையும் நிலையில் உள்ளது.

தடுப்பூசிகள் -70 டிகிரி செல்சியஸில் சேமிக்க வேண்டியிருப்பதால் சில சிக்கல்கள் இருக்கும் என்றும் ,மேலும் தடுப்பூசிகளை வழங்கிய பிறகு, அதன் சோதனைக்கு ஒரு வாரம் வரை தேவைப்படும்.The Pfizer இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கு இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை தேவைப்படும்.

ஒரு வாரத்தில் சுமார் 80,000 தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும் நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை கட்டமைக்கப்படுவார் என்றும், மார்ச் மாத இறுதிக்குள் நான்கு மில்லியன் மக்கள் தடுப்பூசி போடுவார்கள் என்றும் திரு மோரிசன் கூறினார்.