அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் முதல் சுற்று கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கான சரியான பாதையில் ஆஸ்திரேலியா உள்ளது என Federal Health Minister Greg Hunt தெரிவித்தார்.
பொதுமக்கள் பயன்பாட்டுக்கான COVID- 19 தடுப்பூசியை ஏற்றுக்கொண்ட முதல் நாடானது The United Kingdom. அதுமட்டுமல்லாமல் அடுத்த வாரம் முதல் இந்த வைரஸினால் மிகவும் எளிதாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு இந்த தடுப்பூசியினை கொடுக்க இருப்பதற்கான திட்டம் உள்ளது எனவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
COVID-19 தடுப்பூசி கண்டுபிடிப்பில் UK-இன் முன்னேற்றம் உலக மக்களுக்கு ஒரு முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது என Mr Hunt தெரிவித்தார். இருந்தாலும் இந்த தடுப்பூசி ஆஸ்திரேலியாவில் கிடைப்பதற்கு இன்னும் சற்று காலம் ஆகும் என்றும் அவர் கூறினார்.
மார்ச் மாதத்தில் ஒப்புதல் கிடைத்தவுடன் முதல் தடுப்பூசியினை சுகாதார பணியாளர்களுக்கும் , வயதில் மிக மூத்தவர்களுக்கும் இந்த தடுப்பூசியை செலுத்துவதற்கான சரியான பாதையில் பயணிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி எதிர்ப்பு திறன் உள்ளவர்கள் பாதுகாப்பு வளையத்தில் உள்ளார்கள் என்றும், அவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே விளைவுகளை சந்திக்கின்றன எனவும் , நாங்கள் அவர்களை கண்காணித்து வருகிறோம் என்றும், தொடர்ந்து நாங்கள் செய்யவேண்டியதை செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய ஆய்வு தெரிவிப்பது என்னவென்றால் ,இந்த தடுப்பூசி 95 சதவீத மக்களை COVID-19 பாதிப்பிலிருந்து தடுக்கும்.பாதிக்கப்பட்டவர்கள் வயதானவராக இருந்தால் இது 94 சதவீத மக்களை பாதுகாக்கும்.
இந்த தடுப்பூசி 6 நாடுகளில் உள்ள 43,500 மக்களிடம் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் எந்த விதமான பாதுகாப்பு பற்றிய கவலை எழுப்பப்படவில்லை.
ஒப்புதல் பெற்ற பின் மருந்துகள் கொடுக்கப்படுவதை பற்றி Mr Hunt ,Australian CEO of Pfizer-ரிடம் பேசினார்.இந்த மாத இறுதிக்குள் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பற்றி செய்திகளை அளித்தது மட்டுமல்லாமல் Therapeutic Goods Administration நிறுவனத்துடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.